மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

கொரோனா: இந்தியாவில் இதுவரை சமூகத் தொற்று இல்லை! 

கொரோனா: இந்தியாவில் இதுவரை சமூகத் தொற்று இல்லை! 

கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் இதுவரை சமூகத் தொற்று மூலம்  பரவவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி 25 ஆம் தேதியில் இருந்து 21 நாட்கள் இந்தியா முழுவதும் மூடப்படும் என்று அறிவித்திருக்கிற நிலையில் மத்திய சுகாதாரத்துறையும், மாநில சுகாதாரத் துறைகளும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். 

 இந்த நிலையில்தான் மத்திய  சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால்  நேற்று (மார்ச் 25)  டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,  “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இதுவரை எந்த சமூக பரவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது” என தெரிவித்தார்.  மேலும், “சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி 563 இந்தியர்களும் 43 வெளிநாட்டினரும்  கொரோனா பாசிட்டிவ்  என கண்டறியப்பட்டுள்ளது.  இதுவரை நமது  விமான நிலையங்களில் 15,24,266 பயணிகள்  சோதனையிடப்பட்டுள்ளனர்.  மற்றும் 22,928 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதே நேரம் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புண்யா சலீலா ஸ்ரீவஸ்தவா,  “இந்தியா போன்ற பெரிய நாட்டில் பிரதமரின் 21 நாள் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறோம். மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுத்திட,   ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளையும் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்” என்று கூறினார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வுக் கூட்டம் முடிந்து  பேசுகையில், “மார்ச் 21, 2020 முதல் சுமார் 64,000 பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர், அவர்களில் 8,000 பேர் பல்வேறு தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் வைக்கப்பட்டுள்ளனர், 56,000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.  ஒரு தொற்று நோயை எதிர்த்துப் போராடுகிறோம். நம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து நெறிமுறைகள், வழிகாட்டுதல்களை  பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. இது ஐபிசியின் 188 வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும், ”என்று அமைச்சர் கூறினார்.

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon