மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

சபரிமலை: பங்குனி ஆராட்டு ரத்து, நடை அடைப்பு!

சபரிமலை: பங்குனி ஆராட்டு ரத்து, நடை அடைப்பு!

சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 28ஆம் தேதி நடை திறக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மார்ச் 29ஆம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி ஆராட்டுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், சடங்குகள் அனைத்தும் நடைபெறும் என்றும் தேவசம் போர்டு கூறியிருந்தது. ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரளாவில் அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

'சபரிமலை நடை மார்ச் 28இல் திறக்காது. ரத்து செய்யப்பட்ட திருவிழா தந்திரியின் ஆலோசனை பெற்று, வேறு தேதியில் நடத்தப்படும்' என தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon