மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

சென்னை கோயம்பேடு: இரண்டு நாட்கள் விடுமுறை!

சென்னை கோயம்பேடு: இரண்டு நாட்கள் விடுமுறை!

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (மார்ச் 27, 28) ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்று அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நோய் தொற்று பர‌வுவதை தடுக்கும் வகையில், கோயம்பேடு சந்தையில் மொத்தமாக காய்கறி வாங்க மட்டுமே அனுமதி, சில்லறை வர்த்தகத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர ஆணையர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று (மார்ச் 25) சிறிய கடை வியாபாரிகள் மட்டுமே, காய்கறிகளை வாங்க வந்திருந்தனர். இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு, சென்னை கோயம்பேடு வரும் 27, 28ஆம் தேதிகளில் விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது.

ராஜ்

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon