அனைவருக்கும் ஒரே கடவுள்தான்: மதநல்லிணக்கம் பற்றி மதுரை ஆதீனம்

public

அனைவருக்கும் தேவை மத நல்லிணக்கம்தான் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்குபெற்று இந்தியாவின் பல மாநிலங்களில் திரும்பியோரில் கணிசமானோருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸை இஸ்லாமியர்கள் பரப்புவதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். கொரோனா என்பது சாதி, மதம் பார்த்து வராது என்று அதற்கு பலரும் பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் மத நல்லிணக்கம் குறித்து மதுரை ஆதீனம் பேசிய வீடியோ இணையங்களில் வைரலாகியுள்ளது.

அவர் பேசும்போது, “இந்தியாவிலுள்ள அனைத்து சாதியினரும் கடவுளின் பிள்ளைகள்தான். உலகத்திலுள்ள 600 கோடி மக்களுக்கும் ஒரே ஒரு இறைவன்தான். அதனால்தான் அனைத்து கடவுள்களும் ஒரே கருத்தை சொல்லியிருக்கின்றனர். உலகத்தில் இருப்பது ஒரே ஒரு இறைவன் தான். அவனுடைய உத்தரவால்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று இஸ்லாமியர் மார்கத்தை கடைபிடிக்கும் மக்களுக்கு அவர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார்.” என்று தெரிவித்தார்.

உருது மொழியில் நபிகளின் வார்த்தையைக் கூறிய மதுரை ஆதினம், ‘எல்லாம் வல்ல இறைவா, உன்னையே வணங்குகிறேன். உனது உதவியையே கோருகிறேன். உனது அருளையே நாடுகிறேன்’ என்று அதற்கு பொருள். நபிகள் நாயகம் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை. இறைத்தூதர் என்றுதான் சொன்னார்” என்று தெரிவித்தார்.

மேலும், “கிறிஸ்தவத்தின் தூதர் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தும்போது ‘ஏலி ஏலி லாமா சமக்தாமி’ என்று சொன்னார். அதாவது என் தேவனே, ஏன் என்னை கைவிட்டுவிட்டீர்கள் என்று சொன்னார். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் அவர் சொன்னார். இதனை எதற்காக சுட்டிக்காட்டுகிறேன் என்றால் ஆண்டவன் என்பவன் ஒருவன் தான். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள் என்ற உணர்வை அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஆகவே இப்போது நமக்குத் தேவை மத நல்லிணக்கம்தான்” என்றும் அவர் கூறினார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *