மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது பாய்ந்தது குண்டாஸ்!

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது பாய்ந்தது குண்டாஸ்!

மின்னம்பலம்

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க உலகமே போராடி வரும் நிலையில், மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வதந்திகளைப் பரப்பி வந்த சென்னையைச் சேர்ந்த போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் அளித்த புகாரின் பேரில் 8 பிரிவுகளில் கைது செய்யப்பட்ட திருத்தணிகாசலம், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஜாமீன் வழங்கினால் அது, இவரைப் போன்றவர்களை ஊக்கமளிப்பது போல் அமைந்துவிடும் என்று தெரிவித்த எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் அவர் மீது தொடர்ந்து மோசடி புகார்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் திருத்தணிகாசலத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கச் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருத்தணிகாசலம் அடைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி சிறைக்கு இதுதொடர்பான உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளது.

-கவிபிரியா

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon