மின்னம்பலம்
தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தைச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, “இன்று 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிப்பு எண்ணிக்கை 13,191லிருந்து 13,967ஆக அதிகரித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 567 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 400 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,282 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7 பேர் இன்று உயிரிழந்ததால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7,588ஆக இருக்கிறது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று (மே 21) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “ முதலில் கொரோனா சோதனை செய்யும்போது நெகட்டிவ் என வந்தவர்களுக்கு சிகிச்சைக்கு பின் வீடுகளுக்கு அனுப்புவதற்கு முன்பாக எக்ஸிட் டெஸ்ட் எடுக்கும் போது 25 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராடி வரும் நிலையில் இதுபோன்ற பாதிப்பு தமிழகத்துக்கு பெரிய சவாலாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-கவிபிரியா