வீட்டிலிருந்தே வேலை: 70 சதவிகிதத்தினர் விருப்பம்!

public

வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தைத் தொடர விரும்புவதாக 70 சதவிகிதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ‘நைட் பிராங்’ எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், சமூக இடைவெளியைப் பராமரிக்கவும் வணிகத்தைத் தொடர்ந்து நடத்தவும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் இந்தத் திட்டத்தை நிறுவனங்கள் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

பிரபல சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங்’ பல தரப்பட்ட 230 நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ஆய்வை மேற்கொண்டது. வீட்டிலிருந்தே பணிகளைத் தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோதும், அதனால் உற்பத்தி திறன் எதுவும் பாதிக்கப்படவில்லை என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் தொலைவிலிருந்து செயல்படும்போது ஊழியர்கள் குடும்பத்துடனான இணைப்பு, கவனச்சிதறல் ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு 30 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் வீட்டிலிருந்து பணியாற்றுவர் என ஆய்வில் கலந்துகொண்டோரில் 50 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், 7 சதவிகிதத்தினர் மட்டும் அலுவலகம் வந்து பணியாற்றுவர் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீட்டிலிருந்து பணியாற்றிய நிலையில், உற்பத்தி திறன் அதிகரித்திருப்பதாக 28 சதவிகிதத்தினரும் முன்னர் இருந்த அளவிலேயே இருந்ததாக 35 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். மேலும், 26 சதவிகிதத்தினர் உற்பத்தித் திறன் குறைந்துவிட்டதாகவும் 11 சதவிகிதத்தினர் கணித்து சொல்வது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர்.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *