மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 9 பேர் பலி - பாதிப்பு 646 !

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 9 பேர் பலி - பாதிப்பு 646 !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாகத் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேர நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (மே 26) மாலை வெளியிட்டது. அதன்படி, ஒரே நாளில் தமிழகத்தில் 592 பேர் உட்பட மற்ற மாநிலங்களிலிருந்து வந்தவர்களையும் சேர்த்து 646 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பாதிப்பு 17, 728ஆக அதிகரித்துள்ளது. இன்று 611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,342ஆக உள்ளது.

அதிகபட்சமாக இன்று 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 8,256ஆக உள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 506 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 11,640ஆக உள்ளது.

சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று திருவள்ளூரில் 25 பேருக்கும், செங்கல்பட்டில் 22 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

-கவிபிரியா

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon