மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

குழந்தைகளுக்கு பெயர் குவாரண்டைன், சானிடைசர்!

குழந்தைகளுக்கு பெயர் குவாரண்டைன், சானிடைசர்!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மீரட்டை சேர்ந்த ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு குவாரண்டைன்மற்றும் சானிடைசர் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த பெயர்களை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது கொரோனா வைரசை அழிப்பதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள் இவை இரண்டும்தான் என்று கூறியுள்ளனர்.

"இந்த இரண்டு பெயர்கள் குவாரண்டைன், மற்றும் சானிடைசர் இரண்டும் மனிதர்களை கொரோனா வைரசிடமிருந்து காப்பாற்றுவதற்கான காவலர்கள். எனவேதான் நாங்கள் எங்களது ஆண் குழந்தைகளுக்கு இந்த பெயர்களை வைத்துள்ளோம். எனக்கு கூட பிரசவத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்று குழந்தைகளின் தாயார் வேணு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

"இரண்டுமே பாதுகாப்பு கொடுப்பவை. எனவே இந்த பாதுகாப்பு உணர்வு வாழ்நாள் முழுவதும் வரவேண்டும். இவைதான் எங்கள் குழந்தைகளுக்கு வைப்பதற்கான சிறந்த பெயர்கள்" என்று குழந்தையின் தந்தை தர்மேந்திரா கூறியுள்ளார்.

மீரட் நகரில் மோதி புரம் பகுதியை சேர்ந்த இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே பதின்பருவத்தில் மணி என்ற ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

- பவித்ரா குமரேசன்

புதன், 27 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon