மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

முகக்கவசத்துக்குப் பதிலாக உள்ளாடை!

முகக்கவசத்துக்குப் பதிலாக உள்ளாடை!

உக்ரைனில் இரண்டு குழந்தைகளின் தாய், தபால் நிலையம் ஒன்றுக்கு முகக்கவசம் அணியாமல் வந்ததால், அவர் தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக மாற்றிக்கொண்ட காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உலகின் பலவேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக, பொது இடத்துக்கு எங்கு சென்றாலும், தங்களின் அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அல்லது சுவாசக்கருவி அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த விதிகள் நாட்டில் இருக்கும் கடைகள், சந்தைகள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் உக்ரைனில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வருகிறார். அப்போது அவர் அங்கு பணியாற்றும் ஊழியரிடம் பேசுவது போன்று உள்ளது.

அதன்பின் உடனடியாகத் தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாகப் பயன்படுத்துகிறார். இது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாக, அதன் ஊழியர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட, தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இருப்பினும் இந்த வீடியோவை பகிர்ந்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசி ஒருவர், “அவர் ஒரு சரியான வழியைக் கண்டுபிடித்துள்ளார். முகக்கவசத்துக்குப் பதிலாக உள்ளாடைகளைப் பயன்படுத்த யாரும் இதுவரை தடை விதிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

-ராஜ்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon