மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

பிளஸ் 2 வேதியியல் பாடத்துக்கு போனஸ் மார்க்!

பிளஸ் 2  வேதியியல் பாடத்துக்கு போனஸ் மார்க்!

பிளஸ் 2 வேதியியல் பாடத்துக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாக நேற்று தொடங்கப்பட்டது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 43 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் வழியில் வேதியியல் பாடத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று அறிவித்துள்ளது. 31ஆம் கேள்விக்கு மூன்று மதிப்பெண்கள் போனஸ் தர வேண்டும் என்று விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது வேதியியல் தமிழ் வழி மாணவர்களுக்குக் கேட்கப்பட்ட கேள்வியில், புரதம் என்ற தமிழ் சொல்லுக்குப் பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து இருந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த கேள்விக்குப் பதில் அளித்திருந்தாலே கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது.

-கவிபிரியா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon