மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

இ பாஸ் முறையில் முக்கிய மாற்றம்?

இ பாஸ் முறையில் முக்கிய மாற்றம்?

நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்து ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி ஐந்தாம் கட்ட ஊரடங்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்.. அதுபோலவேதான் அடுத்த ஊரடங்கு முக்கியமான தளர்வுகளைக் கொண்டிருக்கும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இந்தத் தளர்வுகளில், ‘எமர்ஜென்சி பாஸ்’ எனப்படும் அவசரப் பயணத்துக்கான அனுமதி முக்கியமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் இப்போது மூன்று வகையான இ பாஸ் எனப்படும் அவசர பயணத்திற்கான அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு,. இதைத் தவிர தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு என்று மூன்று வகையான அவசர பயண அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இப்போதைய நிலவரப்படி தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்குச் செல்வதற்கு அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. ஏற்கனவே பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், மாவட்டம்-டு மாவட்டம் செல்ல பாஸ் என்பது மக்களுக்கும் பெரும் சிரமமாக இருக்கிறது.

இந்த நிலையில் ஐந்தாம் கட்ட போராட்டங்களில் இந்த இடத்தில் முக்கியமான மாற்றங்களை கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது. இதுபற்றிக் கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது,

“மக்களின் நடைமுறை சிரமங்களை உணர்ந்து தமிழகத்துக்குள் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களுக்குள் சென்று வர இ பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்வதற்கும்... மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்வதற்கும் மட்டுமே இ பாஸ் முறையை தொடரலாம் என்றும், சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்குள் சென்று வருவதற்கு இ பாஸ் முறை தேவையில்லை என்றும் முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே ஐந்தாம் கட்ட ஊரடங்கில் வெளி மாநிலம், சென்னை டு மாவட்டங்கள், மாவட்டங்கள் டு சென்னை ஆகிய பயணங்களுக்கு மட்டுமே இ பாஸ் முறை பின்பற்றலாம். தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களிடையே சென்று வரை இ பாஸ் முறையை ரத்து செய்யலாம் என்றும் ஆலோசனை நடக்கிறது. அதேநேரம் முகக் கவசம், கையுறைகள், சானிடைசர்கள் ஆகிய கட்டுப்பாட்டுகளைத் தமிழகம் முழுக்க தீவிரமாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

-வேந்தன்

சனி, 30 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon