wதங்கம் விரும்பாத 37 சதவிகித இந்தியப் பெண்கள்!

public

இந்தியாவில் இதுவரை தங்கத்தை விரும்பாத 37 சதவிகிதப் பெண்களை இனி விரும்பி வாங்க வைக்க சில்லறை நகை விற்பனையாளர்கள் முன்வர வேண்டும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ’ஹால் அண்டு பார்ட்னர்ஸ்’ உடன் இணைந்து உலக தங்க கவுன்சில் உலகின் முக்கியமான தங்க நகை சந்தைகளான இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 18 –65 வயதுடைய பெண்களிடம் கருத்துக்கணிப்பை மேற்கொண்டது.

இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வுகுறித்து உலக தங்க கவுன்சில், “இந்தியாவில் உள்ள 37 சதவிகிதப் பெண்கள் இதுவரை தங்கத்தை விரும்பாதவர்கள்; வாங்க தயங்குபவர்கள். ஆனால் அவர்கள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் உள்ளவர்களாகவும், தகுதி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில், 44 சதவிகிதம் பேர் கிராமப் பகுதிகளையும், 30 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களையும் சார்ந்தவர்கள். சில்லறை நகை விற்பனையாளர்கள் இப்பிரிவினரை இலக்காகக் கொள்ளலாம். இந்திய பெண்கள், நகை வாங்குவதில் ஆர்வம் உடையவர்கள் என்றாலும் இளம் தலைமுறையினர் தங்கம் தங்களது அந்தஸ்து, ஃபேஷன் ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக இல்லை எனக் கருதுகிறார்கள்.

இளம் பெண்கள், தங்க நகைகளுடன் உணர்வு ரீதியாக இணைக்கப்படவில்லை. இது தொடரும்பட்சத்தில் எதிர்காலத்தில் சந்தையில் தேவை குறையும். இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்த பெண்களை ஈர்த்து, அவர்களின் தேவைகளை நவீன தொழில்நுட்பங்களுடன் பூர்த்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் இவர்களை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும்” என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *