மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

மும்பை புயல்: ஓடுபாதையில் சறுக்கிய விமானம்!

மும்பை புயல்:  ஓடுபாதையில் சறுக்கிய விமானம்!

மும்பை விமான நிலையத்தில் நிசர்கா புயலின் வீசிய காற்றில் சிக்கிய விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு வெளியேறிய காட்சி வைரலாகி வருகிறது.

அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல், மகாராஷ்டிராவின் மும்பை அருகே கரையைக் கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் நிசர்கா புயலின் வீசிய காற்றில் சிக்கிய விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு வெளியேறிய காட்சி வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி மகராஜ் விமான நிலையத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்துக்கு உள்ளான சரக்கு விமானம் பெட் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. பெங்களூரிலிருந்து மும்பை நோக்கி சரக்கு பொருள்களை ஏற்றிக் கொண்டு பெட் எக்ஸ் நிறுவனத்தின் விமானம் வந்தது. அப்போது மும்பையில் புயல் வீசியது.

விமான நிலையத்தின் ரன்வே முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. பெரிய அளவில் காற்றும் வீசியது. பலத்த காற்று வீசிய நிலையில் ஆடிக்கொண்டே இறங்கிய விமானம் சறுக்கியபடி ஓடுபாதையை விட்டு வெளியே சென்றது.

ஆனாலும் சுதாரித்துக்கொண்ட விமானி அந்த விமானத்தை ஓடுபாதைக்கு வெளியே புல் தரையில் நிறுத்தினார். இதில் அந்த விமானம் சேதம் அடையவில்லை. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. இதையடுத்து அங்கு தற்காலிகமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

-ராஜ்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon