மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ஜார்ஜை கொன்ற காவல் அதிகாரியை விவாகரத்து செய்யும் மனைவி!

ஜார்ஜை கொன்ற காவல் அதிகாரியை விவாகரத்து செய்யும் மனைவி!

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாயிடை காவல்துறை அதிகாரி டெரெக் சாவ்வின் கழுத்தில் முழங்காலால் அதிகநேரம் மிதித்ததால் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் டெரெக் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடன் இருந்த மூன்று காவல் அதிகாரிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரியான டெரெக் சாவ்வின் மனைவி கெல்லி சாவ்வின் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு கணவரின் கடைசி பெயரை ஏற்றிருந்த வந்த அவர் விவாகரத்துக்குப் பிறகு கடைசி பெயரை மாற்றக் கோரியும் விண்ணப்பித்துள்ளார். சாவ்வின் என்று பெயரிடப்பட்டுள்ள அவரின் இரண்டு வீடுகளுக்கும் பெயர்மாற்றம் கூறியும் விண்ணப்பித்துள்ளார்.

ஜார்ஜ் மரணம் மே 25ஆம்தேதி நிகழ்ந்த நிலையில், டெரெக் மீது கொலைக்குற்றம் ஜூன் 28 ஆம் தேதி சுமத்தப்பட்டது. கொலைகுற்றம் சாட்டப்பட்டப்படுவதற்கு முதல் நாளே கெல்லி விவாகரத்துக்காக விண்ணப்பித்திருந்தார். இந்தத் திருமணம் பந்தம், உடைந்த உணர்ச்சிகளற்ற ஒரு பந்தமாக இருப்பதாக கூறி விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

2010- ஆண்டு ஜூன் மாதம் இவர்களது திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. விவாகரத்துக்கு பதிவு செய்யும்போது அவருடைய பெயர் மாற்றம் முக்கிய வேண்டுகோளாக இருந்துள்ளது. அவர்களுடைய வங்கி இருப்பு மற்றும் வாகனங்களில் பாதி உரிமை கோரியுள்ள கெல்லி கணவரிடமிருந்து வேறு எந்த விதமான உதவியும் தேவையில்லை எனவும் தான் ரியல் எஸ்டேட் பணியில் தான் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜார்ஜின் மரணம் குறித்து கெல்லி எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், அவரது வழக்கறிஞர், ஜார்ஜின் மரணத்தால் கெல்லி நிலைகுலைந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் நணபர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

- பவித்ரா குமரேசன்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon