மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜுன் 2020

இந்தியாவில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு பாதிப்பு: ஆய்வாளர்கள்!

இந்தியாவில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு பாதிப்பு:  ஆய்வாளர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் சீராக அதிகரித்து, ஜூன் மாத மத்தியில் தினமும் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி செய்துவரும் சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

வடமேற்கு சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற லாங்சாவ் பல்கலைக்கழகத்தில் 180 நாடுகளுக்கான கொரோனா கணிப்பு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வாளர்கள் கணிப்பின்படி ஜூன் இரண்டாம் தேதி, 9 ஆயிரத்து 296 பேர் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்படைந்தவர்கள் கண்டறிய படுவார்கள் என்று முன்கூட்டியே கணித்தது. அன்றைய இந்திய அரசின் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 980 ஆக அறிவிக்கப்பட்டது. புதன் கிழமையிலிருந்து (03/06/2020) சீன ஆய்வாளர்களின் கணிப்பின்படி 9676, 10078, 10498, 10936 என அடுத்த நாட்களில் தினம்தோறும் அதிகரித்து வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

இவர்களின் கணிப்பிற்கு இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் புதிய கொரோனா பாதிப்பு அடைந்தவர்களாக வெளியிடப்பட்ட எண்ணிக்கை 7477 ஆகும். இதே நாள் அன்று சீன ஆய்வாளர்களால் கணிக்கப்பட்ட எண்ணிக்கை 7607 ஆக இருந்தது. இது கிட்டத்தட்ட உண்மை நிலைக்கு மிக அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய கணிப்பு குறித்த ஆய்வு துவக்க நிலையிலேயே உள்ளது. இதில் இருக்கும் பிழைகளை திருத்திக் கொண்டு மீண்டும் புதிய கணிப்புகளை நாங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம் என பல்கலைக் கழகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 15 ஆயிரம் புதிய பாதிப்படைந்தவர்கள் ஒரு நாளில் கண்டறிய படுவார்கள் எனக் கணிப்பில் கூறப்படுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதே ஆய்வு, அமெரிக்காவில் தினந்தோறும் 30 ஆயிரம் புதிய கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் கண்டறிய படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த கொரோனா கண்டறியும் மாடல் பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்து இந்த கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஒரு இடத்தின் பருவ நிலை, மக்கள் தொகை, மக்களடர்த்தி மேலும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கணிப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு காரணியும் உலகின் வெவ்வேறு இடங்களில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என இந்த பல்கலைக் கழகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவையும் வைரஸ் பாதிப்பில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சமூக இடைவெளிக்கான வாய்ப்பு குறைக்கப்பட்டு, தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு வருவதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

வியாழன் 4 ஜுன் 2020