மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜுன் 2020

அமேசான் -ஏர்டெல்: இன்னொரு டிஜிட்டல் கூட்டணியா?

அமேசான் -ஏர்டெல்: இன்னொரு டிஜிட்டல் கூட்டணியா?

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனமான பாரதி ஏர்டெல்லில் குறைந்தது 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்க அமேசான்.காம் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தங்கள் கண் பதித்து வருகின்றன. அண்மையில்தான் ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் 43 ஆயிரத்து 574 கோடி ரூபாயை முதலீடு செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் சுமார் 5 சதவீத பங்குகளை அமேசான் வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனமான பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இடையேயான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன, ஒப்பந்த விதிமுறைகள் மாறக்கூடும், அல்லது ஒரு உடன்பாடு எட்டப்படாமல் கூட போகலாம். ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நம்பகமான சோர்ஸ்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்புத் துறையிடம் கேட்கப்பட்டபோது, “எதிர்காலத்தில் நாங்கள் என்ன செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்பதைப் பற்றிய யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் பாரதி ஏர்டெல்லிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “அனைத்து டிஜிட்டல் பிளேயர்களுடனும் எங்கள் தயாரிப்புகள், உள்ளடக்கம் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல விருப்பம் உள்ளது. இதற்கு மேல் ஏதும் சொல்ல இல்லை” என்று கூறியுள்ளனர்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

வியாழன் 4 ஜுன் 2020