மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

இன்று 1384: 5ஆவது நாளாக 1000த்தை கடந்த பாதிப்பு!

இன்று 1384: 5ஆவது நாளாக 1000த்தை கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் புதிதாக 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5ஆவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 1000த்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்த தகவல்களைத் தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் புதிய உச்சமாகப் பிற மாநிலங்களிலிருந்து வந்த 11 பேர் உட்பட மாநிலம் முழுவதும்1,384 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1072 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. இதில் 167 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதேசமயம் இன்று ஒரே நாளில் 585 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 901 ஆக உள்ளது.

இன்றைய தேதிவரை 12,232 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 15 ஆயிரத்து 991 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரத்து 786 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon