மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோமி லேப்டாப்!

இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோமி லேப்டாப்!

ஜியோமி நிறுவனம் இந்தியாவில் தான் வெளியிட இருக்கும் புதிய லேப்டாப் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜியோமி நிறுவனம் வெளியிட இருக்கும் லேப்டாப்பின் அட்டைப் பெட்டியின் படத்தை வெளியிட்டு, விற்பனையை நோக்கி இருக்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மேலும் அதனுடைய ஹாரிசான் பதிப்பான (Horizon edition)புதிய லேப்டாப்பின் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளது. ஜியோமி வெளியிட்டிருக்கும் லேப்டாப்பின் அட்டைப்பெட்டி படத்தில், லேப்டாப்பில் இருக்கும் புதிய அம்சங்கள் குறித்து எழுதப்பட்டு இருந்தாலும் அவை புகைப்படத்தில் சரியாக தெரியவில்லை.

இருப்பினும் இது குறித்த தகவல்களை வெளியிடும் நபரான இஷான் அகர்வால் லேப்டாப்பின் சிறப்பு அம்சங்கள் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறும்போது மி நோட்புக் மற்றும் மி நோட்புக் ஹாரிசான் என இரண்டு மாடல்களை வெளியிட இருக்கிறது ஜியோமி. அதன் சிறப்பு பதிப்பில் 14 இன்ச் ஹாரிசான் டிஸ்ப்ளேவுடன், டிடிஎஸ் பவர் ஆடியோ மற்றும் எஸ்எஸ்டி சேமிப்பையும் கொண்டிருக்கும். இந்த லேப்டாப்புகள் 10 மணி நேரம் பேட்டரி ஆயுளை கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக மி நோட் புக் மாடலை வெளியிட்டது ஜியோமி. அது 12 மணி நேரம் பேட்டரி ஆயுளுடன் முழு ஹெச்டி டிஸ்ப்ளேயில் வரும் எனவும் , இன்டெல் கோர் ப்ராசசர் கொண்டு இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜியோமி நிறுவனம் சீனாவில் லேப்டாப்களை பல மாடல்களில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஜியோமி தற்போது இந்தியாவில் மி நோட் புக்கை ஜூன் 11ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இது சீன நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் பொருட்களின் விரிவாக்கமாக அமையும்.

- பவித்ரா குமரேசன்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon