Iநீட் தேர்வு தேதி அறிவிப்பு!

public

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதித்தேர்வு, ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த நூறு நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

பல மாநிலங்களிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதித்தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி பரவலாக இருந்து வந்தது.

ஏற்கனவே 2020-2021 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தத் தேர்வை நடத்த முடியாத சூழல் நீடித்து வந்தது. தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அல்லது ஒத்தி வைக்கப்படுமா? என்று குழப்பம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நீடித்து வந்த நிலையில் இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

On demand from various candidates regarding correction in Candidate Particulars & choice of Centre Cities in Online Application Forms for NEET (UG)-2020, the facility for corrections will be operational on https://t.co/Dni8TLd1Fd from 4th – 15th July. pic.twitter.com/8x7Z3QdtUk

— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 3, 2020

அதன்படி **நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் ஐஐடி மற்றும் என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதியும் நடத்தப்படும்** என்று அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாணவர்களின் உடல்நலனில் அக்கறை கொள்ளும் அதே நேரத்தில் தரமான கல்வியையும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. அதை கருத்தில் கொண்டே தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன” என்று அவர் அறிவித்துள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *