}கொரோனா சாக்லேட் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்!

public

சமீபத்தில் கொரோனா மைசூர்பாக் விற்பனைக்கு வந்து தடை செய்யப்பட்ட நிலையில், ஊட்டி அருகே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறி விற்பனை செய்யப்பட்ட சாக்லேட் வகைகளைத் தயாரித்த தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஹெச்.பி.எஃப் பகுதியில் சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சாக்லேட் வகைகள் ஊட்டி – கூடலூர் சாலையோரத்தில் செயல்படும் கடையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் அந்தக் கடையில் விற்பனை செய்யப்படும் சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கொரோனா பரவலைத் தடுக்கும் என உரிமையாளர் விளம்பரம் செய்தார். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது.

இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அந்தத் தொழிற்சாலை மற்றும் கடையில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று (ஜூலை 11) அந்தத் தொழிற்சாலை மற்றும் கடைக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அப்போது உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி எவ்வித அனுமதியும் பெறாமல் சாக்லேட் தயாரிப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக சாக்லேட் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்ட சாக்லேட் வகை பாக்கெட்டின் விலை ரூ.45-க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் தவறான விளம்பரம் செய்தது, அனுமதி பெறாமல் சாக்லேட் தயாரித்தது போன்ற காரணங்களுக்காக அந்த தொழிற்சாலை மற்றும் கடையை பூட்டி ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி டாக்டர் தங்க விக்னேஷ், “உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த சாக்லேட் வகைகளின் மாதிரிகள் சோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. உணவு பாதுகாப்புத் துறையிடம் பிஸ்கட், கேக் போன்ற பேக்கரி பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வாங்கிவிட்டு, அதோடு சாக்லேட் வகைகளையும் தயாரித்து வந்துள்ளனர். அந்தத் தொழிற்சாலையின் தயாரிப்புகளை மக்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *