ஊரடங்கு முடிந்து வண்ணத்துப் பூச்சிகளாய் வாருங்கள் – வெங்கையா நாயுடு

public

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சூழலில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் கடந்த சில மாதங்களில் மக்கள் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறோமா, இதுபோன்ற நிலையற்ற சூழலைச் சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளோமா என சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

“கொரோனா காலத்தில் வாழ்க்கை சிந்தனை’’ என்ற தலைப்பில் தமது ஃபேஸ்புக்கில் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டுள்ள பதிவில் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“வாழ்க்கையின் படிப்பினைகள், உயரிய வாழ்க்கைக்குத் தேவையான மொத்தச் சூழல் ஆகியவை குறித்து, அவை எத்தனை மடங்காக இருந்தாலும் நிலையான மதிப்பீடு அவசியமாகும். இப்போது நாம் கொரோனாவுடன் வாழ்ந்து கொண்டிருப்பதால், அத்தகைய வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம்’’ என்று குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.

நவீன வாழ்க்கையின் போக்கு, இயல்பு, வேகம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வதுடன், நல்லிணக்கமான, அளவிடப்பட்ட வாழ்க்கையை முறையாக வரையறுக்கும் நோக்கத்துடன் வெங்கையா நாயுடு தமது “கொரோனா காலத்தில் வாழ்க்கைச் சிந்தனை’’ என்னும் பதிவில், வலியுறுத்தியுள்ளார்.

பதற்றமில்லாத வாழ்க்கையை மேற்கொள்ள நாயுடு கூறியுள்ள ஆலோசனைகள் வருமாறு; “உணவை மருந்தாக எடுத்துக் கொள்வது போல சரியான சிந்தனை மற்றும் செயல்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கையை நிலைநிறுத்தும்; பொருள்கள் மீது நாட்டத்தைக் குறைக்க ஆன்மிகப் பரிமாணத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; சரி, தவறு ஆகியவற்றை விளங்கிக் கொண்டு, கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்; மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், அவர்கள் நலன் விழைய வேண்டும்; சமூகப் பிணைப்புகளை வளர்த்து, வாழ்க்கையின் நோக்கத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்” என்ற நாயுடு,

“பூமிக் கோளத்துக்கு நாம் தேவையில்லை; ஆனால், நமக்கு இந்தக் கோளம் தேவை. இது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என இதற்கு நாம் மட்டுமே உரிமை கோருவது, இயற்கைச் சமன்பாட்டைக் குலைத்து, வேறுபட்ட தீமைகளுக்கு வழிவகுக்கும்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “லார்வா என்னும் கூட்டுப்புழு எப்படி தன்னை முடக்கிக்கொண்டு அழகிய வண்ணத்துப்பூச்சியாக உருவெடுக்கிறதோ, அதுபோல தற்போதைய கொரோனா தொற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள அனுபவங்களை முறையாகப் பிரதிபலித்து, மக்கள் வண்ணத்துப் பூச்சிகளாக உருவெடுக்க வேண்டும். பாதுகாப்பான வருங்கால வாழ்க்கைக்குச் சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கோரியுள்ளார் வெங்கையா நாயுடு.

துணைக் குடியரசுத் தலைவரின் இந்த கொரோனா மானுடப் பதிவு பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *