Vரிலாக்ஸ் டைம்: கார்ன் கோசுமல்லி!

public

வழக்கமான உணவை காலை 8 மணி, மதியம் 2 மணி, இரவு 8 மணி எனச் சாப்பிடலாம். காலை 11 மணி, மாலை 4 மணி, 6 மணிக்கு ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம். எல்லா நேரத்திலும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது உடல்நலனுக்கு ஏற்றதல்ல. இதனால் சோர்வு, மந்த நிலை மற்றும் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் கார்ன் கோசுமல்லி போன்ற ஹெல்த்தி ஸ்நாக்ஸ் வகைகள் சாப்பிட்டால் இதுபோன்ற குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.

**எப்படிச் செய்வது?**

நறுக்கிய இரண்டு பச்சை மிளகாயுடன் சிறிதளவு கொத்தமல்லித்தழை, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். ஒரு கப் வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகளுடன் இரண்டு கப் கேரட், நான்கு டீஸ்பூன் தேங்காய்த் துருவல், அரைத்த விழுது, இரண்டு சிட்டிகை வெள்ளை மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலே நான்கு டீஸ்பூன் வேர்க்கடலைப் பொடி தூவி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிடவும்.

**சிறப்பு**

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். பார்வை குறைபாடுகளை நீக்கும். ரத்த சோகையில் இருந்து பாதுகாக்கும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *