மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

இழப்பீடு தந்து நீட் தற்கொலைகளை ஊக்குவிப்பதா?: நீதிமன்றம்!

இழப்பீடு தந்து நீட் தற்கொலைகளை ஊக்குவிப்பதா?: நீதிமன்றம்!

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது என்பது தற்கொலையை ஊக்குவிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த நீட்தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. அரியலூர் அனிதாவை தொடர்ந்து தற்போது நாமக்கல் மோதிலால் வரை இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவப் படிப்பில் இடம் பெறுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்ற மாணவி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வை எழுதுவதற்கு முன்பாக மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி தேர்வு பயத்தை போக்க வேண்டும். சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த சூழலில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத இருந்த மாணவர்களில் நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கறிஞர் சூரிய பிரகாசம் நீதிபதி கிருபாகரன், நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு முறையிட்டார்.

அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருத்திகா தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. அதனாலேயே மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது. மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது. எனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்குவது என்பது தற்கொலைகளை ஊக்குவிப்பது போல் உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.

இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரிய பிரகாசத்துக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 14 செப் 2020