மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: மகாராஷ்டிர ஸ்பெஷல் - அம்தி!

கிச்சன் கீர்த்தனா: மகாராஷ்டிர ஸ்பெஷல் - அம்தி!

காரமான, இனிப்பான மற்றும் புளிப்பான பருப்பு சார்ந்த உணவு வகைகள் மகாராஷ்டிரியர்களின் விருப்ப உணவாக இருக்கிறது. அவற்றில் இந்த அம்திக்குச் சிறப்பிடம் உண்டு. நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

என்ன தேவை

துவரம்பருப்பு - அரை கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று

பச்சை மிளகாய் - 3

மகாராஷ்டிரா கோடா மசாலா - 2 டீஸ்பூன் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்)

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

வெல்லம் - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பருப்பைக் கழுவி குக்கரில் சேர்த்து மூன்று விசில் வரை வேகவைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயத்தைச் சேர்த்து தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் வெந்த துவரம்பருப்பைச் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் கோடா மசாலா, வெல்லம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 14 செப் 2020