மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

கொரோனாவைக் கொன்றானே வருக: அப்டேட் குமாரு

கொரோனாவைக் கொன்றானே வருக:  அப்டேட் குமாரு

கொரோனாவோட நம்ம தமிழ்நாடு எப்படி பழகிடிச்சுங்கறதுக்கு இன்னிக்குதான் உதாரணத்தை கண்கூடா பாத்தேன். எங்க ஃபிரண்ட்ஸ் வாட்ஸ் அப் க்ரூப்ல, காலையில எட்டுமணிக்கெல்லாம் ஒரு போஸ்ட்... கொரோனாவை வென்று ஊர் திரும்பும் அண்ணன் அவர்களை பாதம் பணிந்து வரவேற்கிறோம்னு போட்டு அவர் படத்தைப் போட்டு டிசைன் பண்ணி போட்டிருந்தாங்க. அந்த ஆளுக்கு போன் பண்ணி, ‘என்னப்பா இப்படியெல்லாம் டிசைன் பண்ணி போடுறே...’னு கேட்டேன். ‘என்ன இதுக்கே இப்டி ஆயிட்டீங்க? நம்ம தெருமுனைக்கு வந்து பாருங்க ப்ளக்ஸே வச்சிருக்கோம்னு’ சொல்றாப்ல.

கொரோனாவோட வாழப் பழகினது மட்டுமல்ல, அதை ஜெயிச்சு வர்றவருக்கு வரவேற்பு கொடுத்து ப்ளக்ஸ் வைக்குற அளவுக்கு போயிடுச்சு தமிழ்நாடு. எதையும் எதிர்த்து நிப்போம்ல

நீங்க அப்டேட்டை பாருங்க...

கோழியின் கிறுக்கல்!!

அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து ஐம்பது கேள்விகளுக்கு பதில் கூறுபவர் மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டம் இயற்றுங்கள்!!

மருத்துவருக்கே தகுதித் தேர்வு வைக்கும் பொழுது, நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பவருக்குத் தேவையில்லையா??

கடைநிலை ஊழியன்

மேனேஜர் தப்பாவே சொன்னாலும் அது தான் சரி னு எப்ப நீங்க உணரீங்களோ அப்பத்தான் நீங்க முன்னேறுவீங்க !!

கார்பொரேட் நீதி..

இரா.மூவன்வேந்தன்

சிலதுங்க கேட்டுவாசலையே திறக்க தயங்கும் இந்த நேரத்தில

அநீதிக்கு எதிரா எப்பவுமே வாடிவாசலை திறந்தே வைத்திருக்கும் #சூரரைப்போற்று_வோம்

சரவணன் .M

சூர்யா டூ நீதிபதிகள் ~

"இவரு மட்டும் கொரோனாவுக்கு பயந்து வீடியோ கான்பரன்ஸ்ல தீர்ப்பு சொல்வாராம், ஆனா மாணவர்கள் மட்டும் பள்ளிக்கூடத்துக்கு போய் எக்ஸாம் எழுதணும்னு சொல்வாராம்..."

ஜோக்கர்..

ஆமா தம்பி மனுநீதி மேல இவ்ளோ கோவம் வர என்ன காரணம்?! எதை படிச்சு தெரிஞ்சுக்கிடீங்க??

சூர்யா ~ மஹாபாரதம், ராமாயணம் படிச்சுதான்...

PrabuG

இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நன்மை என்பதற்கு நானே எடுத்துக்காட்டு - அன்புமணி ராமதாஸ்.

காலேஜ் பங்க் அடிக்குற மாதிரி பாராளுமன்ற கூட்டத்தை பங்க்கடிச்சதை தான் சொல்றாரு.

Senthil

குடி போதையில் கார் ஓட்டி கைதாவதும், மதுக் கடைகளுக்கு எதிராக போராடி கைதாவதும் ஒன்றல்ல. நடனம் ஆடலாம் . ஆணவத்தில் ஆடக்கூடாது.

தர்மஅடி தர்மலிங்கம்

கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் -பிரதமர் மோடி!?

எது.? அந்த கொண்டக்கடலை வந்த மாதிரியா.!?

சரவணன். ℳ

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் முதல்வர் வேட்பாளராக அவரே இருக்க வேண்டும் - ராகவா லாரன்ஸ்.

ரஜினிகாந்த் ~ "கட்சி தொடங்கினா தானேடா வேட்பாளரா நிக்க சொல்லுவ..."

கடைநிலை ஊழியன்

யூடியூப் ல சமையல் வீடியோ பாத்து ரசம் வைக்கலாம் னு ஆரம்பிச்சா, கடுக எண்ணெய்ல தாளிக்கவும் னு சொல்லும் போது ரெண்டு Ad போடுறான். skip பண்றதுக்குள்ள கடுகு கருகி போயிருது !!

டேய் யூடியூப்..

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 14 செப் 2020