மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

புதிதாக 5,752 பேருக்கு கொரோனா: 53 பேர் பலி!

புதிதாக 5,752 பேருக்கு கொரோனா: 53 பேர் பலி!

தமிழகத்தில் புதிதாக 5,752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. புதிதாக 5,752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 5,08,511ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 170ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் இன்று 78,190 பேர் உட்பட இதுவரை, 57,79,589 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று 5,799 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதால் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4,53,165ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் இன்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் உட்பட இதுவரை 8,434பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் 46,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று, 991 பேர் உட்பட இதுவரை, 1,49,583 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக கோவையில் இன்று 498 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 14 செப் 2020