மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

காந்தி ஜெயந்தி அன்று விஜய் சேதுபதியின் ‘க/பெ. ரணசிங்கம்’

காந்தி ஜெயந்தி அன்று விஜய் சேதுபதியின் ‘க/பெ. ரணசிங்கம்’

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தன்னுடைய படத்தை வெளியிட இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து இந்திய மொழிகளிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.

ராஜ்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon