Pரிலாக்ஸ் டைம்: ஸ்பைசி அப்பளம்!

public

நூடுல்ஸ், பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் ஆகியவற்றை ரிலாக்ஸ் டைமில் சாப்பிடுவதைத் தவிர்த்து வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய இந்த ஸ்பைசி அப்பளம் செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

**எப்படிச் செய்வது?**

ஐந்து மிளகு அப்பளத்தைப் பொரித்து பொடித்துக்கொள்ளவும் அல்லது அப்பளத்தை சுட்டு பொடித்துக்கொள்ளலாம். பெரிய பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் தலா கால் கப், ஓமப்பொடி கால் கப், உப்பு தேவையான அளவு, சாட் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து அரை மூடி எலுமிச்சைச்சாறு பிழியவும். பரிமாறும் முன் உடைத்த அப்பளம் போட்டு, சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

**சிறப்பு**

எளிதாக ஜீரணமாகும். பசி உணர்வைத் தூண்டும். புத்துணர்ச்சி தரும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *