மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

ரிலாக்ஸ் டைம்: பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸ்!

நம்மில் பலருக்கும் பீட்ரூட் சாப்பிட பிடிக்காது. அதில் உள்ள லேசான இனிப்பும் அடர்நிற வண்ணமும் சிலருக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது. இதனாலே ஏராளமான நல்ல விஷயங்களைக்கொண்ட பீட்ரூட்டைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். விலை குறைவான அதேநேரம் உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசியத்தையும் தன்னுள் வைத்துள்ள பீட்ரூட்டைத் தேங்காய்ப்பால் சேர்த்து ஜூஸ் செய்து ரிலாக்ஸ் டைமில் அருந்துங்கள். புத்துணர்ச்சி பெறுங்கள்.

எப்படிச் செய்வது?

ஒரு தேங்காயை உடைத்துத் துருவிக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், தோல் சீவிய பீட்ரூட் துருவல் கால் கப், ஏலக்காய் மூன்று சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். பிறகு வடிகட்டியில் வடிகட்டி பிழிந்துகொள்ளவும். மீண்டும் ஒருமுறை பிழிந்த தேங்காய் - பீட்ரூட் விழுதை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி நன்கு பிழிந்து வடிகட்டிக்கொள்ளவும். இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் நன்கு கலந்து பரிமாறவும்.

சிறப்பு

உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றுபவர்களுக்கு எலும்பு தசைகள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறாதபோது, அவை பலவீனமடைந்து கை அல்லது கால்களை நகர்த்துவதற்கான திராணியைக் குறைக்கிறது. இந்த பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்ளும்போது, இது போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது. வாரத்துக்கு ஒருமுறை இந்த ஜூஸை எடுத்துக்கொண்டால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கும்.

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon