கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட அமைச்சருக்கு கொரோனா!

public

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி கோவாக்சின். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் இருந்து வருகிறது.

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையின் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த இரண்டு கட்ட சோதனைகளிலும் வெற்றிகரமான முடிவுகள் வந்த நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனை, கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மருத்துவமனையில் தொடங்கியது.

தடுப்பூசி போடும் நிகழ்வில் முதல் தன்னார்வலராக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் போட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 26 ஆயிரம் பேர் வரை மூன்றாம் கட்ட சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது. நாட்டில் நடத்தப்பட்ட தடுப்பூசி சோதனைகளில் இதுவே மிகப்பெரிய சோதனை என்றும் குறிப்பிட்டது.

#WATCH Haryana Health Minister Anil Vij being administered a trial dose of #Covaxin, at a hospital in Ambala.

He had offered to be the first volunteer for the third phase trial of Covaxin, which started in the state today. pic.twitter.com/xKuXWLeFAB

— ANI (@ANI) November 20, 2020

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியானா சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று (டிசம்பர் 5) காலை 11 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அனில் விஜ், “தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அம்பாலா பகுதியில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும், தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கோவாக்சின் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட அமைச்சருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இதன் ஆராய்ச்சியாளர்கள் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நேற்று பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புதல் கிடைத்தவுடன் சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**பிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *