மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு ஸ்பைரல்ஸ்

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு ஸ்பைரல்ஸ்

உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்ற பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக்கிழங்கை வைத்து பலவிதமான உணவுகள் செய்யப்படுகின்றன. அவற்றில் இந்த ஸ்பைரல்ஸ் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பிடித்த ஒன்றாக அமையும். நீங்களும் வீட்டிலேயே செய்து குடும்பத்தினரை அசத்தலாம்.

என்ன தேவை?

மீடியும் சைஸ் உருளைக்கிழங்கு – 4 (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்)

கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

உலர் தேங்காய்த்துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ச்சி ஆறவைத்த பால் – கால் கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மசித்த உருளைக்கிழங்குடன் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உலர் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் பால் சேர்த்து நன்கு கலக்கவும் (பேஸ்ட் போல வரும் வரை பால் சேர்த்துக் கலக்கவும்). இந்தக் கலவையை பைப்பிங் பேகில் நிரப்பி, நுனியை கட் செய்யவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நிரப்பிய கலவையை ஸ்பைரல் (சுருள்வட்டம்) போல பிழிந்து, வேகவைத்து எடுக்கவும். சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: சிறு உருளை - மிளகு வறுவல்

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ! ...

6 நிமிட வாசிப்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

புதன் 24 மா 2021