மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

கிச்சன் கீர்த்தனா: பொட்டேட்டோ பீட்சா

கிச்சன் கீர்த்தனா: பொட்டேட்டோ பீட்சா

பீட்சா நிறுவனங்கள் மக்களின் விருப்பத்துக்கேற்ப பலவிதமான பீட்சாக்களைச் செய்து அசத்துகின்றன. அவற்றில் உருளைக்கிழங்கு பீட்சாவும் ஒன்று. அப்படிப்பட்ட இந்த பொட்டேட்டோ பீட்சாவை நீங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

பேஸ் செய்ய...

பெரிய உருளைக்கிழங்கு – 2

மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – ஒரு டீஸ்பூன் (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)

எலுமிச்சைச்சாறு – 2 - 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

டாப்பிங் செய்ய...

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

குட மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கேரட் – ஒன்று (துருவவும்)

பீட்சா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்

சீஸ் துருவல் – அரை கப்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, தோல் நீக்கி வட்டமான வில்லைகளாக நறுக்கவும். அதனுடன் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், கேரட், குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, காய்கறிகள் வெந்தவுடன் பீட்சா சாஸ் சேர்த்துக் கலந்து இறக்கி வைக்கவும். நான்ஸ்டிக் பேனில் (Pan) எண்ணெய் தடவி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருளைக்கிழங்குத் துண்டுகளை வைக்கவும். ஒருபுறம் ரோஸ்ட்டானதும் திருப்பிப் போட்டு அதன் மீது காய்கறி கலவையைப் பரப்பவும். அதன் மீது சீஸ் துருவல் தூவி மூடி போட்டு 2 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது சீஸ் உருகியதும் எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: உருளைக்கிழங்கு ஸ்பைரல்ஸ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 25 மா 2021