கிச்சன் கீர்த்தனா: சோயா பருப்பு வடை

அசைவ உணவுப்பிரியர்களுக்கு மாற்று சோயா. சாப்பிட சுவையாகவும், மெல்லுவதற்கு சாஃப்டாகவும் இருக்கும் சோயாவில் வித்தியாசமாக மொறுமொறுப்பான வடையும் செய்து அசத்தலாம். மட்டன் கோலா உருண்டை போல் இருக்கும் இந்த வடை.
என்ன தேவை?
காய்ந்த சோயா பயறு, கடலைப்பருப்பு - தலா அரை கப்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோயாவுடன் கடலைப்பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவுடன் சோம்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.