மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

முகக்கவசம் இல்லையென்றால் கொரோனா பரிசோதனை!

முகக்கவசம் இல்லையென்றால் கொரோனா பரிசோதனை!

செய்யாறு அருகே முகக்கவசம் அணியாமல் சென்ற மக்களை தடுத்து நிறுத்தி சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்கள் அலட்சியமாக முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கின்றனர்.

இந்நிலையில், செய்யாறு அடுத்த அனக்காவூர் காவல் நிலையம் அருகே ஆற்காடு – திண்டிவனம் சாலையில் கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேற்று(ஏப்ரல் 1) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் சென்ற மக்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறி முகக்கவசத்தையும் வழங்கினர்.

இதுகுறித்து அந்த மருத்துவக் குழு கூறுகையில்,” கொரோனா அதிகரித்து வரும் சூழலிலும், மக்கள் அலட்சியமாக முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். அதனால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்” என கூறினர்.

கைதிகளுக்கு தடுப்பூசி

நேற்று முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறைகளில் 45 வயது நிரம்பியவர்கள், தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என சிறைத் துறை அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மத்திய சிறையில் 13 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மத்திய சிறை, வேலூர், பாளையங்கோட்டை, பெண்கள் தனிச்சிறை போன்ற சிறைகளில் உள்ள 82 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தவிர 647 சிறைக்கைதிகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறைத் துறை டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

வினிதா

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 2 ஏப் 2021