மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: மரவள்ளிக்கிழங்கு பணியாரம்

ரிலாக்ஸ் டைம்: மரவள்ளிக்கிழங்கு பணியாரம்

தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற உணவு குழிப்பணியாரம். காரம் மற்றும் இனிப்பு என இருவகையான குழிப்பணியாரங்களுடன் தற்போது தங்களுக்குப் பிடித்த சத்தான பொருட்களைச் சேர்த்து விதவிதமான பணியாரங்களைத் தயாரிக்கிறார்கள். அவற்றில் ஒன்று இந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் தேங்காய்த்துருவலுடன் எட்டு காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக்கவும். இதனுடன் மூன்று கப் மரவள்ளிக்கிழங்கு துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். ஒரு கப் தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைச் சூடாக்கி, எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சிறப்பு

இந்தப் பணியாரத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்து இருப்பதால் உண்ட உணவு செரிக்க உறுதுணை நிற்பதுடன், வயிற்றுக்கோளாறுகளில் இருந்தும் நம்மைக் காக்கும்.

.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 2 ஏப் 2021