மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

முகக்கவசத்தில் தங்கம் கடத்தல்!

முகக்கவசத்தில் தங்கம் கடத்தல்!

முகக்கவசத்தில் தங்கம் கடத்திய நபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.

சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் நூதனமான முறையில் தங்கம் கடத்திவரும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.

நேற்று, ஃபிளை துபை விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது அப்துல்லா (40) என்பவர் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

விசாரணையின்போது அவர் பதற்றத்துடன் காணப்பட்டதாலும், அவர் அளித்த பதில்கள் தெளிவாக இல்லாததாலும், அவரது முகக்கவசத்தை அகற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது முகக்கவசம் வழக்கத்தை விட அதிக எடையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவரது முகக்கவசம் கத்தரித்து திறக்கப்பட்டதில், இரண்டு முகக்கவங்களை ஒன்றாக இணைத்து தைத்திருந்ததும், அவற்றின் நடுவே தங்கப் பசை வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ 2.93 லட்சம் மதிப்புடைய 65 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவரது பையை சோதனை செய்து பார்த்தபோது, ஐபோன் 12 புரோ 10, பயன்படுத்திய ஐ போன்கள் 8, பயன்படுத்திய மடிக்கணினிகள் 9, இரண்டு பெட்டிகளில் சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ 8.2 லட்சமாகும்.

மொத்தம் ரூ 11.13 லட்சம் மதிப்புடைய தங்கம், ஐபோன்கள், பயன்படுத்திய மடிக்கணினிகள் மற்றும் சிகரெட்டுகள் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 2 ஏப் 2021