மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

ஆண் பெண் பாகுபாடு: உலக அளவில் இந்தியாவுக்கான இடம்?

ஆண் பெண் பாகுபாடு: உலக அளவில் இந்தியாவுக்கான இடம்?

உலகப் பொருளாதார அமைப்பின் உலகளாவிய ஆண் பெண் பாகுபாடு பட்டியலில் இந்தியா 140ஆவது இடத்தைப் பிடித்து, கடந்த ஆண்டைவிட இந்தியா 28 இடங்கள் சரிந்துள்ளது.

பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி பெறுதல், சுகாதாரம் மற்றும் வாழ்தல், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஆண் பெண் பாலின இடைவெளியை உலகப் பொருளாதார அமைப்பு ஆய்வு செய்து 15 ஆண்டுகளாக அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மொத்தம் 156 நாடுகள் பட்டியலில் இந்தியா 140ஆவது இடத்தையே பெற்றுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு 112ஆவது இடத்தில் இருந்த இந்தியா, மேலும் 28 இடங்கள் சரிந்துள்ளது.

குறிப்பாக பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பு துணைப் பட்டியலில் இந்தியாவின் பாலின இடைவெளி 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல அரசியல் அதிகாரம் துணைப் பட்டியலிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில்நுட்பப் பணிகளிலும் அதேநிலைதான். இந்தியாவில் 14.6 சதவிகிதப் பெண்கள்தான் உயர் பதவிகளில் உள்ளனர்.

பெண்களின் வருவாய் விஷயத்திலும் உலகின் கடைசி 10 நாடுகளில் ஒன்றாகவே இந்தியா உள்ளது. இங்கு ஆண்களுடன் ஒப்பிடும்போது ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே பெண்கள் வருமானம் ஈட்டுகின்றனர். சுகாதாரம் மற்றும் வாழ்தல் துணைப்பட்டியலிலும் இந்தியா கடைசி ஐந்து நாடுகளில் ஒன்றாகத்தான் உள்ளது. பாலின பிறப்பு விகித வேறுபாடும் அதிகமாக உள்ளது. பொதுவில் இந்தியாவின் பாலின இடைவெளி 62.5 சதவிகிதமாக இருக்கிறது.

பாலின இடைவெளி பட்டியலில் அண்டை நாடுகளான வங்காள தேசம் (65), நேபாளம் (106), இலங்கை (116), பூட்டான் (130) ஆகியவை இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளது. தெற்காசியாவில் இந்தியாவைவிட பின்தங்கியிருப்பவை பாகிஸ்தான் (153), ஆப்கானிஸ்தான் (156) ஆகிய இரண்டு நாடுகள்தான்.

தொடர்ந்து 12ஆவது முறையாக உலகின் பாலின சமத்துவமிக்க நாடாக ஐஸ்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ருவாண்டா, சுவீடன், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் இரு பாலினத்தவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

-ராஜ்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 2 ஏப் 2021