மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: கேசர் பாதாம் குல்பி

கிச்சன் கீர்த்தனா: கேசர் பாதாம் குல்பி

நள்ளிரவு வேளையில் நம் சாலைகளில் கலகல மணியோசையுடன் வலம்வரும் சுவை வண்டி அது. அந்த வண்டியிலிருக்கும் பானையில் மறைந்துகிடக்கும் குல்ஃபிக்காக நாம் காத்திருந்த காலங்களை மறக்க முடியுமா? இப்போது குல்ஃபி வண்டிகள் குறைந்துபோய், ஹோட்டல்கள், விருந்துகளில் டெசர்ட்டாக குல்ஃபி பரிமாறப்படுகிறது. அதோடு, விதவிதமான குல்ஃபிகளுக்கென்றே கடைகளும் முளைக்கத் தொடங்கி விட்டன. சம்மரில் குல்ஃபி இல்லாமலா? இதோ... குழந்தைகள் விரும்பிச் சுவைக்கும் வகையில் இந்த கேசர் பாதாம் குல்பியை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.

என்ன தேவை?

காய்ச்சாத பால் - 200 மில்லி

சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன்

பாதாம் - 15

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

குங்குமப்பூ - 2 சிட்டிகை

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

கார்ன்ஃப்ளாருடன் சிறிதளவு பால் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். பத்து பாதாமை வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும். மீதமுள்ள ஐந்து பாதாமைத் துருவவும். ஊறவைத்த பாதாமுடன் சிறிதளவு பால் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதனுடன் சர்க்கரை, அரைத்த பாதாம் விழுது சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கார்ன்ஃப்ளார் கரைசல் ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து, கைவிடாமல் கிளறி இறக்கவும். சூடாக இருக்கும்போதே பாதாம் துருவல், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி குல்ஃபியை மெதுவாக வெளியே எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு

கார்ன்ஃப்ளாருக்குப் பதிலாகப் பால் பவுடர் அல்லது கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.

நேற்றைய ஸ்பெஷல்: பிளாஸ்டிக் பாட்டிலில் மோர் கொண்டு போறீங்களா?

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 5 ஏப் 2021