மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: கேசர் பிஸ்தா குல்ஃபி!

கிச்சன் கீர்த்தனா: கேசர் பிஸ்தா குல்ஃபி!

குல்ஃபி ஐஸைக் கண்டுபிடித்தவர்கள் யார் என்ற கேள்விக்குச் சந்தேகமே இன்றி பதில் சொல்லலாம். முகலாயர்கள். பண்டைய பாரசீகத்தில் பனிக்கட்டியுடன் இனிப்பு ஏதாவது சேர்த்து உண்ணும் பழக்கம் இருந்தாலும் முகலாயர்கள் காலத்தில்தான் அது குல்ஃபியின் வடிவத்தைப் பெற்றது.

அக்பரின் அவைக் குறிப்புகளைச் சொல்லும் ‘அய்ன்-இ-அக்பரி' நூலில் குல்ஃபியின் செய்முறை தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாலை வைத்துச் செய்யப்படும் இனிப்புகள் முகலாயர்களின் சமையலறைகளில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்தன. பாலைச் சுண்டக் காய்ச்சி கோவா தயாரித்தார்கள். அதில் குங்குமப்பூ, பிஸ்தா மற்றும் சில பொருள்களைக் கலந்தனர். உலோகங்களால் ஆன பிரத்யேகமான கூம்பு வடிவங்களுக்குள் இந்தக் கலவையைத் திணித்தனர். அதன் வாய்ப்பகுதியை கோதுமை மாவு கொண்டு அடைத்தனர். இந்தக் கூம்புகளை வேதி உப்புகளைக் கொண்டு நீரைக் குளிர்விக்கும் முறையில் (Saltpetre) அந்தப் பனிக்கலவைக்குள் வைத்து உறைய வைத்தனர். மறுநாள் அக்பர் குல்ஃபியைக் குளிரக் குளிரச் சுவைத்தார். ஆக, 16ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவின் முதல் ஐஸ்க்ரீமான குல்ஃபி புழக்கத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட குல்ஃபியை நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

என்ன தேவை?

காய்ச்சாத பால் - 3 கப் (750 மில்லி)

சர்க்கரை - 80 கிராம்

உடைத்த பிஸ்தா - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

குங்குமப்பூ - சிறிதளவு

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பால் பவுடருடன் சிறிதளவு பால் சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி இறக்கவும். அதனுடன் பால் பவுடர் கரைசல், பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும் இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி குல்ஃபியை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

பால் பவுடருக்குப் பதிலாக கார்ன்ஃப்ளார் சேர்த்துக்கொள்ளலாம்.

நேற்றைய ஸ்பெஷல்: கேசர் பாதாம் குல்ஃபி

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 ஏப் 2021