மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சாக்லேட் குல்ஃபி

கிச்சன் கீர்த்தனா: சாக்லேட் குல்ஃபி

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஐஸ்க்ரீம் சந்தை 14.1 சதவிகிதம் அளவு வளர்ந்திருக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஐஸ்க்ரீம் ஃப்ளேவர், சாக்லேட். கப் வடிவ ஐஸ்க்ரீம்களே இந்தியச் சந்தையை ஆள்கின்றன என்றாலும் குல்ஃபி இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா ஆகியவை ஐஸ்க்ரீம் அதிகம் விற்பனையாகும் டாப் மூன்று மாநிலங்கள். தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆனால், வீட்டிலேயே செய்யப்படும் இந்த சாக்லேட் குல்ஃபி சுவையில் முதலிடம் பிடிக்கும். அனைவராலும் விரும்பப்படும்.

என்ன தேவை?

சாக்லேட் துருவல், கண்டன்ஸ்டு மில்க் - தலா கால் கப்

கோவா - அரை கப்

காய்ச்சாத பால் - அரை லிட்டர்

சாக்கோ சிப்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அலங்கரிப்பதற்குச் சிறிதளவு சாக்லேட் துருவலைத் தனியாக எடுத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கெட்டியாகக் காய்ச்சவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க், கோவா சேர்த்துக் கிளறவும். பிறகு மீதமுள்ள சாக்லேட் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி குல்ஃபியை மெதுவாக வெளியே எடுக்கவும். சாக்லேட் துருவலால் அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு

விரும்பினால் பாதாம், பிஸ்தா, சர்க்கரை சேர்க்கலாம். கண்டன்ஸ்டு மில்க், கோவாவில் சர்க்கரை உள்ளதால், சர்க்கரையைப் பார்த்துச் சேர்க்கவும். மோல்டில் ஊற்றுவதற்கு முன் பிளெண்டரில் அடித்து ஊற்றினால் குல்ஃபி நன்றாக செட் ஆகும்.

நேற்றைய ஸ்பெஷல்: கேசர் பிஸ்தா குல்ஃபி!

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 7 ஏப் 2021