aகிச்சன் கீர்த்தனா: நுங்கு பாப்சிகல்

public

ஐஸ்க்ரீம் என்றால், துள்ளாத மனமும் துள்ளும். இதை விரும்பாத குழந்தைகள் இல்லை. அவர்களுக்காகவே வித்தியாசமான சுவை கொண்ட பாப்சிகல் (குச்சி ஐஸ்) ஐஸ்க்ரீம்களை, கோடைக்காலத்தில் பரவலாகக் கிடைக்கும் நுங்கைப் பயன்படுத்தி வீட்டிலேயே இந்த நுங்கு பாப்சிகல் செய்யலாம்.

**என்ன தேவை?**

நுங்கு – 8 (தோல் நீக்கவும்)

காய்ச்சாத பால் – 2 கப்

சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் – சில துளிகள்

**எப்படிச் செய்வது?**

இரண்டு நுங்குகளைச் சிறிய துண்டுகளாக்கவும். மீதமுள்ள நுங்குகளை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி இறக்கவும். பால் வெதுவெதுப்பாக இருக்கும்போது அரைத்த நுங்கு விழுது, நுங்குத் துண்டுகள், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து ஆறவிடவும். இதை மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி பாப்சிகலை மெதுவாக வெளியே எடுக்கவும்

**குறிப்பு:**

வெனிலா எசென்ஸுக்குப் பதிலாக ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம். விரும்பினால் சாரைப்பருப்பு சேர்க்கலாம். பாலை நன்றாகக் காய்ச்சினால்தான் பாப்சிகல் மிருதுவாக இருக்கும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: சேமியா பாப்சிகல்](https://www.minnambalam.com/public/2021/04/08/1/saemia-popsical)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *