மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சித்திரை ஸ்பெஷல்: பால் பாயசம் – தமிழ்நாடு

கிச்சன் கீர்த்தனா: சித்திரை ஸ்பெஷல்: பால் பாயசம் – தமிழ்நாடு

சித்திரை திருநாள் வாழ்த்துகள். உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஏப்ரல் மாதம் நடைபெறுகிற இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் செயல்முறைகளிலும் நிறையவே ஒற்றுமை உண்டு. பகிர்ந்து உண்ணுதல், பரிசுகள் வழங்குதல், உறவுகளோடு அளவளாவுதல் ஆகியவை எல்லா இடங்களிலும் உண்டு.

புத்தாண்டுக்கு முந்தைய நாள்களில் வீட்டையும் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்து அலங்கரிப்பதில் தொடங்குகிறது விழாக்கோலம். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, ஆபரணங்கள், நெல் ஆகிய மங்கலப்பொருள்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதைப் புத்தாண்டு அதிகாலையில் காண்பது வழக்கம். இந்த சித்திரைக் கொண்டாடத்தில் முக்கிய இடம்பெறுவது இந்தப் பால் பாயசம்.

என்ன தேவை?

அரிசி - ஒரு கப்

தண்ணீர் கலக்காத பால் - 10 கப்

சர்க்கரை - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

முந்திரி - சிறிதளவு

நெய் – சிறிதளவு

எப்படிச் செய்வது?

பெரிய பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து பாலைக் கொதிக்கவிடவும். கொதித்தபின் பாதி பாலைத் தனியே எடுத்துக்கொள்ளவும். கழுவிய அரிசியை மீதமுள்ள பாலில் சேர்த்து (ஊறவிட வேண்டாம்) 5 - 10 நிமிடங்கள் வேகவைக்கவும். இடையிடையே கிளறிவிடவும். எஞ்சிய பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராகக் கலந்துவிடவும். அரிசி குழைவாக வெந்ததும், லேசாக மசித்துவிட்டு, சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கலந்துவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: சுகியன் – ஆந்திரா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

புதன் 14 ஏப் 2021