மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை தட்டை

கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை தட்டை

யார் வீட்டில் முருங்கை மரம் நிற்கிறதோ, அவர்கள் குடும்பத்தை நோய் சீக்கிரம் அண்டாது என்று நம் முன்னோர் சொல்வார்கள். ஏனென்றால், முருங்கை என்பது வெறும் மரமல்ல; வீட்டிலேயே இருக்கும் வைத்தியர். இது மறுக்க முடியாத நிஜம். கொள்ளை நோய்க் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ள முருங்கையை உணவில் சேருங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். அதற்கு இந்த முருங்கையிலை தட்டை உதவும்.

என்ன தேவை?

சுத்தம் செய்த முருங்கையிலை - கால் கப்

அரிசி மாவு - ஒரு கப்

உளுத்த மாவு (வறுத்து அரைத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகச் சேர்க்கவும். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி இதனுடன் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர்விட்டு மாவாகப் பிசைந்துகொள்ளவும். மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய பூரி வடிவில் தட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி தட்டைகளைப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: ஈஸியா சமைக்க... ஹெல்த்தியா சாப்பிட

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 26 ஏப் 2021