wகிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை ராகி ரொட்டி

public

முருங்கையிலையானது, மந்தம், உடல்சூடு, கண் நோய், மயக்கம், தலைவலி போன்றவற்றை நீக்கக் கூடியது. உடலுக்கு வலிமை சேர்த்து ரத்தச்சோகையைப் போக்கக்கூடியது. வயிற்றுப் புண்ணை ஆற்றக்கூடியது. குறிப்பாக, குழந்தை பெற்றெடுத்த பெண்கள், தாய்ப்பால் ஊற உணவில் முருங்கைக்கீரை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் வழக்கம். அப்படிப்பட்ட முருங்கையிலையுடன் கேழ்வரகு சேர்த்து முருங்கையிலை ராகி ரொட்டி செய்து பலன் பெறலாம்.

**என்ன தேவை?**

ராகி மாவு (கேழ்வரகு மாவு) – ஒரு கப்

முருங்கையிலை – ஒரு கப்

காய்ந்த மிளகாய் – 3

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கடுகு – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – கால் கப்

எண்ணெய், உப்பு, சுடுநீர் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

முருங்கையிலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் முருங்கையிலை சேர்த்து, அது சுருங்கி நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு அடுப்பை அணைத்து கலவையை ஆறவிடவும்.

ராகி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். உப்பு, முருங்கையிலை கலவை, தேங்காய்த் துருவலை அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு கலந்துகொள்ளவும். இதனுடன் வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, மென்மையான மாவாக வரும் வரை பிசைந்துகொள்ளவும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பட்டர் பேப்பர் அல்லது வாழையிலையில் உருண்டையை வைத்து அடை போல தட்டிக்கொள்ளவும்.

தவாவைச் சூடாக்கி சிறிதளவு எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்ததைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: முருங்கையிலை பாட்டீஸ்](https://www.minnambalam.com/public/2021/04/29/1/murungailai-paattis)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *