மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

கிச்சன் கீர்த்தனா: ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய்!

கிச்சன் கீர்த்தனா: ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய்!

நினைக்கும்போதே நாவில் நீர் ஊறவைக்கும் உணவு வகைகளில் ஊறுகாய்க்குத் தனி இடம் உண்டு. கையால் தொட்டு வாயில் இடும்போதே ‘சுர்ர்ர்’ என்று சுண்டியிழுக்கும் சுவை ஊறுகாய்க்கே உரித்தான சிறப்பு. தற்போதைய ஊரடங்கு சூழ்நிலையில் கொளுத்தும் வெயிலைப் பயன்படுத்தி இந்த ராஜபாளையம் ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் செய்துவைத்துக் கொண்டு மதிய உணவைச் சிறப்பாக்கலாம்.

என்ன தேவை?

மாங்காய்த்துண்டுகள் - இரண்டரை கப்

உப்பு, மிளகாய்த்தூள் - தலா கால் கப்

வெல்லத்தூள் (அ) சர்க்கரை - கால் கப்

கடுகு - 2 டீஸ்பூன்

வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணெய் - கால் கப்

கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்

தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

கறிவேப்பிலை, பூண்டு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

மாங்காயுடன் உப்பு சேர்த்து ஊறவைக்கவும். இரண்டு நாள்கள் கழித்து மாங்காயைப் பிழிந்து எடுத்து வெயிலில் காயவைக்கவும். தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். மறுநாள் மாங்காயை மட்டும் வெயிலில் வைக்கவும். மாங்காய்த் தண்ணீரை லேசாகக் கொதிக்க வைக்கவும். ஆறியதும் அதனுடன் மிளகாய்த்தூள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துச் சேர்க்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து மாங்காய்த் தண்ணீர்க் கலவையில் சேர்க்கவும். அதனுடன் காயவைத்த மாங்காய்த்துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்தவும்.

நேற்றைய ரெசிப்பி: கொரோனாவை விரட்டும் இஞ்சி!

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 10 மே 2021