மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் ஊறுகாய்!

கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் ஊறுகாய்!

கோடையில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அந்த நேரங்களில் ஊறுகாய் சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்கும். அதிலும் நெல்லிக்காயில் தயாரான ஊறுகாயைச் சாப்பிடுவது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். இந்த நெல்லிக்காய் ஊறுகாய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.

என்ன தேவை?

நெல்லிக்காய் - கால் கிலோ

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

வெந்தயப்பொடி - முக்கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்

உப்பு - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்துக் கொட்டைகளை நீக்கி, சுளைகளாகத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் நெல்லிக்காய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு இறக்கி மோர் சாதத்துடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: பூண்டு ஊறுகாய்!

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 14 மே 2021