மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்று காவல்துறையினரும் சமபங்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இரவு பகல், வெயில்,மழை என்று பாராமல் காவல்துறையினர் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில்,பலரும் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

வேலையே செய்யாமல் வீட்டிலிருந்து முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கும் அதே நிலைதான். 24 மணி நேரமும் ரோட்டில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் அதே நிலைதான் என்ன அநியாயம்…….. கொந்தளித்து போய் உள்ளனர் தமிழக காவல்துறையினர்.

அரசு தற்போது அறிவித்த ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு வருடத்திற்கு வழங்க முடியாது என்ற அறிவிப்பு அரசுத் துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் காவல் துறையினர் மத்தியில் பெரிய வருத்தத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அரசுத் துறையினர் அனைவரும் 50 விழுக்காடு எண்ணிக்கையில் வேலை செய்கின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் கணக்கில்லாமல் விடுப்பில் உள்ளனர் மற்றும் ஆசிரியர்கள் 2020 ஆம் ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்தனர். இந்தாண்டும் அதே நிலைமை தொடர்கிறது. ஆனால் அவர்களுக்கும் முழு சம்பளமும் ,மற்ற அனைத்து சலுகைகளும் தவறாமல் கிடைக்கிறது.

ஆனால் காலை முதல் மாலை வரை ஊரடங்கை அமல்படுத்த வெயிலிலும் மழையிலும் ரோட்டில் நின்று கொண்டிருக்கும் காவலர்களுக்கும் அதே நிலைதான். இதை விட என்ன பெரிய கொடுமை என்றால் முறையாக கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு கிடைக்காமல் நிறைய காவலர்கள் தவிக்கின்றனர். ரோட்டிலே பணியை செய்து கொண்டிருப்பதினால் தங்களது ஊதிய உயர்வை கூட கேட்டுப் பெறும் நிலையில் உள்ளனர் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய அமைச்சக பணியாளர்கள் கணக்கே இல்லாமல் விடுப்பில் உள்ளனர். ஆனால் சாலையில் தினம் செத்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர் எந்த ஒரு ஊதிய உயர்வு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கும் அவர்களிடம் போய் கெஞ்சி லஞ்சம் கொடுத்து பெறவேண்டியுள்ளது.

குறிப்பாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் நிலைமை இன்னும் மோசம். எந்த ஒரு அரசாங்க பிரதி பலன்களும் இவர்களுக்கு முறையாக கிடைப்பது இல்லை. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது. இதை கேட்பதற்கு அதிகாரிகளுக்கும் தைரியம் கிடையாது என வருத்தத்தில் உள்ளனர் காவல்துறையினர்.

தமிழகத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள், உதவியாளர்கள் என அனைவருக்கும் அரசு சமீபத்தில் ஊக்கத்தொகை அளித்தது. இது பாராட்டக்கூடிய விஷயம். ஆனால் காவல்துறையினருக்கு எந்த ஒரு ஊக்கத் தொகையோ அல்லது ஒரு பாராட்டுதல் கூட அறிவிக்கவில்லை என்ற மனவேதனை அதிகமாக இருக்கிறது.

ஊக்கத்தொகையும் வேண்டாம், பாராட்டுதலும் வேண்டாம் மற்ற அரசாங்கப் பணிகளை போல நாங்களும் 50 விழுக்காடு பணி செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையேல் சொந்த விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற குரல் காவலர்கள் மத்தியில் ஓங்கி வருகிறது.

காவலர்களின் கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

-வினிதா

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 17 மே 2021