மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தற்போதைய சூழலில் உங்களுக்கான உணவு எது?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தற்போதைய சூழலில் உங்களுக்கான உணவு எது?

“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் என்றால், கொரோனா வந்துபோனதே தெரியாமல் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டவர்கள் பலர். ஒருமுறை கொரோனா வந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை மாதங்கள் நம் உடலில் இருக்கும் என்பதும் இன்னும் சரிவர தெரியவில்லை. அதனால், நம் தினசரி உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதுதான் இப்போதைய தீர்வு” என்று கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கமான பட்டியல் இது

* வைட்டமின் ஏ சத்து நிறைந்த பால், பால் பொருள்கள், ஈரல், பப்பாளி, கேரட், மாம்பழம் போன்ற உணவுப் பொருள்களில் ஒன்றிரண்டாவது தினமும் சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி காட்லிவர் ஆயில் மாத்திரையும் சாப்பிடலாம்.

* வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால், எண்ணெய் வகைகளைச் சாப்பிடுங்கள். சீஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவிலும் இந்த வைட்டமின் இருக்கிறது.

* வைட்டமின் சி நிறைந்த தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, குட மிளகாய் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை சாறும் குடிக்கலாம்.

* பேரீச்சம் பழத்தில் இருக்கிற இரும்புச்சத்தைவிட, முருங்கைக்கீரை, கொள்ளு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, எள், கறுப்பு கொண்டைக்கடலை, ஓட்ஸ், ஆட்டு ரத்தம் மற்றும் ஈரலில் இரும்புச்சத்து அதிகம். இவற்றில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* குழம்பு வகைகளில் பட்டை தாளித்துப் பயன்படுத்தலாம். பாலில் மஞ்சள் தூள் சேர்த்துக் குடிக்கலாம். ஒருநாளைக்கு அதிகபட்சமாக 4 சிட்டிகை மஞ்சள்தூள்தான் பாலுடன் கலந்து குடிக்க வேண்டும்.

* வைட்டமின் பி 6 சத்து எல்லா கடலை வகைகளிலும், வாழைப்பழத்திலும் உண்டு. இவற்றையும் சாப்பிட மறந்துவிடாதீர்கள்.

* பால், முட்டை, கோழியில் தரமான புரதம் கிடைக்கும். அரிசியையும் பருப்பையும் சேர்த்து இட்லியாகவோ, தோசையாகவோ சாப்பிடும்போது ஓரளவுக்குத் தரமான புரதச்சத்து கிடைத்துவிடும்.

* பயறு வகைகள், நட்ஸ் வகைகள், சோயாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம், பட்டாணியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம் ஆகியவை சைவம் சாப்பிடுபவர்களுக்கான புரத சாய்ஸ்.

* கீரைகள், சுண்டல் வகைகள், ஆளிவிதை, வெந்தயம், மீன், வால்நட், உளுந்தங்களி போன்றவற்றில் ஓமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இதற்கு புரோ பயாட்டிக் மற்றும் ப்ரீபயாட்டிக் வேண்டும். ஓட்ஸ், வாழைப்பழம், வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் இருக்கிற ப்ரீபயாட்டிக் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குபவை. புளித்தத் தயிரில் புரோ பயாட்டிக் இருக்கிறது. இவையிரண்டும் சேர்ந்து குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

* எண்ணெயில் பொரித்த, நிறைய நெய், வெண்ணெய் சேர்த்த உணவுகள், டால்டா, மைதா, சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* முட்டை, காளான், கடல் சிப்பி, பூண்டு, பிரேசில் நட்ஸ் ஆகியவற்றில் செலினியம் சத்து இருக்கிறது.

* தக்காளி ரசத்தில் லைகோபீன் கிடைக்கும். இதுவும் நோய் எதிர்ப்பு சக்திக்கானதுதான்.

* 12 வயதுக்குக் கீழ் இருக்கிற குழந்தைகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

* நாளொன்றுக்கு கருஞ்சீரகம் 2 முதல் 4 சிட்டிகை அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* 3 முதல் 5 துளசியிலைகளைத் தினமும் சாப்பிடுங்கள்.

கவனம்...

இந்தக் காலகட்டத்தில் விரதம் இருப்பது, டயட் இருப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. லிக்விட் டயட், க்ராஸ் டயட் கூடவே கூடாது. உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், நடைப்பயிற்சி செய்யுங்கள். டயட் வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

நேற்றைய ரெசிப்பி : தக்காளித் தொக்கு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 23 மே 2021