மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

கிச்சன் கீர்த்தனா: பீர்க்கங்காய்த் தோல் துவையல்

கிச்சன் கீர்த்தனா: பீர்க்கங்காய்த் தோல் துவையல்

பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்ற காய்கறிகள் நீர்ச்சத்து நிறைந்தவை. கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இவற்றை வாரத்தில் மூன்று நாள்களுக்கு மேல் சாப்பிடலாம். பீர்க்கங்காயின் தோலில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அதையும் தவிர்க்க வேண்டாம். இந்த ரெசிப்பியில், பீர்க்கங்காயின் தோல் பகுதியை மட்டுமே வதக்குவதால், அதிலுள்ள அனைத்துச் சத்துகளும் அழியாமல் முழுமையாகக் கிடைக்கும். இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், வாழ்வியல் நீரிழிவு, இதய பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட மிகவும் நல்லது. இதிலுள்ள வைட்டமின் பி, சி செரிமானத்தை எளிதாக்கும்.

என்ன தேவை?

பீர்க்கங்காய்த் தோல் - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

தனியா (மல்லி) - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

தேங்காய்த்துருவல் - ஒரு டீஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பீர்க்கங்காய்த் தோலைச் சுத்தம் செய்யும்போது, கடினமான நரம்புள்ள தோல் பகுதிகளை அப்புறப்படுத்தவும். தோல் பகுதியைக் கழுவிய பிறகே சமையலுக்குப் பயன்படுத்தவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு, பீர்க்கங்காய்த் தோல் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கும்போதே, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். தோல் நன்கு வதங்கியதும் புளி, துருவிய தேங்காயைச் சேர்த்து அரைக்க வேண்டும். அரைக்கும்போது, குறைந்த அளவே தண்ணீர் பயன்படுத்தவும்.

நேற்றைய ரெசிப்பி : தற்போதைய சூழலில் உங்களுக்கான உணவு எது?

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 24 மே 2021